1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kapildev meet heart attack appouned ar Hospital

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்க்கு மாரடைப்பு! – மருத்துவமனையில் அனுமதி!

Cricket
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்க்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ். பல ஆண்டுகளாக இந்தியாவின் கனவாக இருந்த உலககோப்பை கிரிக்கெட்டில் 1983ல் இவரது கேப்டன்சியில் விளையாடிய அணி கோப்பை வென்று இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1983ல் இந்திய அணி வென்றது குறித்து “1983” என்ற பெயரிலேயே தயாராகி வரும் படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவ் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவ்வபோது கிரிக்கெட் குறித்து பேசி வந்த கபில்தேவ் தற்போது திடீர் மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
சிஎஸ்கேவுக்கு வயசாகிடிச்சுங்க.. ப்ளே ஆஃப் போக சான்ஸ் இல்ல! – ஸ்காட் ஸ்டைரிஸ் வெளிப்படை!