திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (09:31 IST)

இந்தியாவை பாருங்க.. எவ்ளோ அசுத்தம்! – சும்மா இந்தியாவை சீண்டும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து இந்தியாவை தாக்கி பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் நவம்பரில் வெளியாக உள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்ட அதிபர் வேட்பாளர்கள் ஜோ பிடன் – ட்ரம்ப் இரண்டாவது முறையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அமெரிக்காவின் சுற்றுசூழல் சீர்கேடு குறித்து ஜோ பிடன் பேசியதற்கு மறுப்பு தெரிவித்த அதிபர் ட்ரம்ப் “அடுத்த 35 ஆண்டுகளுக்குள் ஒரு ட்ரில்லியன் மரம் வளர்க்கும் திட்டம் நம்மிடம் உள்ளது. சீனாவை பாருங்கள் அது எவ்வளவு இழிவானது. ரஷ்யாவையும், இந்தியாவையும் பாருங்கள் அவை அசுத்தமானவை. அங்கு மக்கள் சுத்தமான காற்று கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்” என பேசியுள்ளார்.

இந்தியாவை தனது நட்பு நாடு என்று சொல்லிக்கொள்ளும் அதிபர் ட்ரம்ப் கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் இந்தியாவை தாழ்த்தி பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.