24 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக கபில் தேவ்!

Last Updated: செவ்வாய், 31 ஜூலை 2018 (18:01 IST)
கிரிக்கெட்டில் ஜாம்பவானான கபில் தேவ் நாட்டுக்காக முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் உலக கோப்பையை பெற்றுக்கொடுத்தார். தனது ஓய்விற்கு பிறகு தற்போது இந்திய அணிக்காக விளையாட உள்ளார். 
ஆனால், இந்த கிரிக்கெட் போட்டிக்காக அல்ல, கோல்ப் போட்டியில். ஆம், ஜப்பானில் அக்டோபர் மாதம் நடக்கும் ஆசிய பசிபிக் சீனியர்ஸ் கோல்ப் போட்டியில் இந்திய அணி சார்பாக கபில் தேவ் பங்கேற்க உள்ளார்.
 
ஜப்பானில் உள்ள மியாசகி நிகரில் உள்ள டாம் வாட்ஸன் கோல்ப் கிளப்பில் அக்டோபர் 17 முதல் 19 ஆம் தேதி வரை ஆசிய சீனியர்ஸ் கோல்ப் போட்டி நடக்க உள்ளது. இதில்தான் கபில் தேவ் பங்கேற்கிறார். 
 
இது குறித்து கபில் தேவ், கோல்ப் விளையாட்டில் யாருக்கும் நான்  யாரென்று தெரியாது, எனவே, எந்தவிதமான ரசிகர்களின் பார்வையிலும் நான் அதிகமாகத் தெரியப்போவதில்லை. இது உடல் வலிமை, உற்சாகம், சக்தி என அனைத்தையும் ஒருமுகப்படுத்தும் விளையாட்டாகும். என்னை நானே விமர்சித்துக்கொள்ளும் விளையாட்டாகும் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :