கோலி மீதான கேள்விக்குறி... கபில் தேவ் கூறுவது என்ன?
இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக சிறப்பாக விளையாடியது. தற்போது இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் முத்தரப்பு போட்டிகளில் விளையாடிவருகிறது.
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கோலி குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பயிற்சி ஒரு மனிதனை முழுமையடையச் செய்கிறது. பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளில் பயில வேண்டும்.
எந்தச் சூழ்நிலையிலும் இந்த பிட்ச்களிலும் ஆட முடியும் என்பதே உலகின் சிறந்த வீரர் என்பதற்கான அளவுகோல். இந்த வகையில் விராட் கோலி மீது ஒரு கேள்விக்குறி இருக்கிறது.
உலகிலேயே கடினமான இடம், ரன்கள் எடுப்பது எளிதல்ல என்று கருதப்படும் இங்கிலாந்தில் கோலி ரன்கள் எடுக்க வேண்டும். இங்கிலாந்தில் நல்ல தொடக்க கண்டால் அவருக்கு நல்லது,
ஏனெனில் உலகின் தலைசிறந்த வீரராக வேண்டுமென்று அவர் விரும்பினால் அவர் கிரிக்கெட் விளையாடும் அனைத்து இடங்களிலும் ரன்கள் குவிக்க வேண்டும்.