என்னுடன் ஒப்பிடும் அளவிற்கு அவர் தகுதியானவர் இல்லை: கபில் தேவ்!!
வேகப்பந்து வீச்சுடன் சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமையுடைய ஹர்திக் பாண்டியா அடுத்த கபில் தேவ் என்று அழைக்கப்பட்டார். மேலும், ஹர்திக் பாண்டியா இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டராக உருவாகி வருகிறார் என்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் லன்ஸ் க்ளுசெனர் கருத்து தெரிவித்திருந்தார்.
ஹர்திக் பாண்டியா ரியல் ஆல்ரவுண்டர் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். அதற்காக நாம் காத்திருக்க வேண்டும். அதற்கான தகுதியும் அவரிடம் உள்ளது என கபில் தேவ் சமீபத்தில் பாராட்டி இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஹர்த்திக் பாண்டியா 93 ரன்கள் எடுத்தார். 2 வது இன்னிங்சில் 1 ரன் எடுத்தார். 2 வது டெஸ்டில் போட்டியில், 15 ரன்னும், 2 வது இன்னிங்சில் 6 ரன்னும் எடுத்தார்.
இதனால் ஹ்அர்திக் பாண்டியா விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். தற்போது இது குறித்து கபில் தேவ் கூறியுள்ளதாவது, ஹர்த்திக் பாண்டியாவிடம் ஏராளமான திறமைகள் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் அதை நிரூபித்தார். அவர் மனரீதியாக அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
இந்நிலையில் அவர் இதே போன்ற தவறான ஆட்டத்தை தொடர்ந்தால் பாண்டியாவை என்னுடன் ஒப்பிடுவதற்கு அவர் தகுதியானவர் இல்லை என கூறியுள்ளார்.