முதல் போட்டியிலேயே காயம்… ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர்!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் அந்த அணியால் கழட்டி விடப்பட்டார். இந்நிலையில் ஏலத்தில் அவர் கலந்துகொண்டார். ஏலத்தின் போது கேன் வில்லியம்சன் பெயர் வாசிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏலத்தொகை உயர்த்தப்படாததால் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு குஜராத் அணி அவரை வாங்கியது. கடந்த ஆண்டில் அவரது ஏல மதிப்பு ரூ.14 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடினார். இந்த போட்டியில் பீல்டிங் செய்தபோது, காயமடைந்தார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.