வியாழன், 1 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2023 (09:09 IST)

இன்றைய முதல் ஐபிஎல் போட்டியை நடக்கவிடுமா மழை?

இன்றைய முதல் ஐபிஎல் போட்டியை நடக்கவிடுமா மழை?
கொரோனா தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் முழுவதுமாக நடக்கவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு முழுக்க முழுக்க இந்தியாவிலேயே முழு தொடரும் நடக்க உள்ளது. இன்று முதல் போட்டி சி எஸ் கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி அகமதாபாத்தில் நடக்க உள்ளது.

இந்த போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ள நிலையில் அங்கு கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்துள்ளது. அதனால் இன்றும் மழை குறுக்கிட்டு போட்டியை நடக்க விடாமல் செய்துவிடுமோ என்ற அச்சம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.