திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 1 ஏப்ரல் 2023 (10:07 IST)

சொதப்பிய ஜியோ சினிமா ஓடிடி… ஐபிஎல் ரசிகர்கள் அதிருப்தி!

இந்த ஆண்டு முதல் ஓடிடிகளில் ஐபிஎல் கிரிக்கெட்டை ஒளிபரப்பும் உரிமையை ஜியோ சினிமா நிறுவனம் பெற்றுள்ளது. தங்களது இந்த ஓடிடியை பிரபலப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியை ஆவலாகக் காண இருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியே ஏற்பட்டுள்ளது. மோசமான ஒளிபரப்பு மற்றும் லைவ்வில் காணமுடியாதது என பல இடையூறுகளை இந்த செயலியில் சந்தித்ததாக ரசிகர்கள் பலரும் டிவீட் செய்து அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.