ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (09:17 IST)

அப்ப உலகக் கோப்பை தொடருக்கு இவர்தான் விக்கெட் கீப்பரா? ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த புகைப்படம்!

இந்திய அணியில் இப்போது நிலையான விக்கெட் கீப்பர் இல்லை. ரிஷப் பண்ட் காயம் அடைந்து அணியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் ஆகியோருக்கு அந்த வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஆனால் இருவரில் யார் இந்திய அணிக்காக உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் போது வெளியேறிய கே எல் ராகுல் இப்போது காயத்தில் இருந்து மீண்டும் பேட்டிங் பயிற்சிகளை செய்து வருகிறார். மேலும் சமீபத்தில் அவர் விக்கெட் கீப்பிங் பயிற்சியையும் மேற்கொண்டார். இதன் மூலம் அவரை விக்கெட் கீப்பராக நியமிக்க பிசிசிஐ முயற்சி செய்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கில் மற்றும் கோலி முதல் மூன்று இடங்களில் நிரந்தரமாக இருக்க, அடுத்த இடமான நான்காவது இடத்துக்கு மிகப்பெரிய போட்டி இருக்கிறது. ராகுல் –சஞ்சு சாம்சன் – இஷான் கிஷான் ஆகியோர் இந்த இடத்துக்குப் போட்டியில் உள்ளனர். மூன்று பேருமே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.