இந்தியாவின் முதல் தபால் மனிதன் பற்றிய ஹர்காரா திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்!
இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஹர்காரா. இவர் வி1 மர்டர் கேஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படம் மலைப்பகுதியில் வேலை செய்யும் தபால் காரர் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லும் படமாக உருவாகியுள்ளது. காளி வெங்கட் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நாயகியாக கௌதமி நடிக்க, மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தற்போது முன்னணி நிறுவனமான டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.