வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2022 (14:47 IST)

“கே எல் ராகுலுக்கு இன்னும் சில போட்டிகளே உள்ளன…. அப்புறம்…” கவாஸ்கர் எச்சரிக்கை!

கே எல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டதில் இருந்து இன்னும் தன்னுடைய பார்மை மீட்டெடுக்கவில்லை.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே டி20 கிரிக்கெட் போட்டி தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட கே எல் ராகுல் கடைசி நேரத்தில் திடீரென விலகினார். அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியதாக சொல்லப்பட்டது. இதையடுத்து அவர் ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து இப்போது குணமாகி அணியில் இணைந்துள்ளார்.

இதையடுத்து இந்திய அணியின் அடுத்த தொடரான வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்தும் விலகினார். அதன் பின்னர் ஜிம்பாப்வே தொடரில் இடம்பெற்றார்.

ஆனால் அந்த தொடரிலும் சரி, தற்போது நடந்துவரும் ஆசியக் கோப்பை தொடரிலும் அவர் இன்னும் சரியான பங்களிப்பை அளிக்கவில்லை. இதுபற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் “ அவருக்கு இன்னும் சில போட்டிகளே உள்ளன. அதற்குள்ளாக அவர் தன்னை நிருபிக்க வேண்டும். இல்லையென்றால் தேர்வுக்குழு அவரின் இடம் குறித்து யோசிக்க ஆரம்பித்துவிடும். ஏனென்றால் ஒவ்வொரு உலகக்கோப்பை போட்டியும் முக்கியமானது.” எனக் கூறியுள்ளார்.