1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (14:31 IST)

வெளியானது இந்தி விக்ரம் வேதா டிரைலர்… எப்படி இருக்கு?

இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள விக்ரம் வேதா திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக பல கட்டமாக நடந்த படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதாக நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் சமீபத்தில் அறிவித்தர். மேலும் படம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

இதையடுத்து இன்று தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் டிரைலரை அப்படியே பிரதி எடுத்தது போலவே இந்தி டிரைலர் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.