வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (09:24 IST)

கொரோனாவுக்கு மூக்கு வழி செலுத்தும் மருந்து! – இந்தியாவில் அறிமுகம்!

Vaccine
இந்தியாவில் கொரோனாவிலிருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மூக்கு வழியாக செலுத்தும் மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் தொடர்ந்து வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தடுப்பூசி திட்டம் மூலமாக நாடு முழுவதும் 150 கோடி டோஸுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போல அல்லாமல் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

மூக்கின் வழி மருந்தாக செலுத்தப்படும் இது தடுப்பூசி போலவே கொரோனாவுக்கு எதிராக திறனோடு செயல்படக் கூடியது என கூறப்பட்டுள்ளது. இந்த மருந்தை பயன்படுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டகம் அனுமதி அளித்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இந்த மருந்து பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.