வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2022 (07:30 IST)

ஒவ்வொரு ஆண்டும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

Joe Biden
ஒவ்வொரு ஆண்டும் கொரனோ தடுப்பூசி பொதுமக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார். 
 
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா என்பதும் அமெரிக்காவில் தான் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கொரனோ வைரஸ் தடுப்பூசி போடப்படும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார் 
 
அமெரிக்கர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை கொரனோ  தடுப்பூசி போடப்படும் என்றும் கொரனோ வைரஸ் தொடர்ந்து மாறி வருவதால் அதனை சமாளிப்பதற்கு இந்த நடைமுறை உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 வருடம் வருடம் போடப்படும் காய்ச்சல் தடுப்பூசி போல் கொரனோதடுப்பூசியும் அவசியம் செலுத்தப்படும் என்றும் மக்கள் அதனைச் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்