1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. K L Rahul sent to London for treatment

ஐந்தாவது டெஸ்ட்டுக்கும் லீவ் லெட்டர் கொடுத்த கே எல் ராகுல்.. சிகிச்சைக்காக லண்டன் பயணம்!

இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கே எல் ராகுல் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். அதன் பின்னர் மூன்றாம் டெஸ்ட்டுக்கான அணியில் அவர் பெயர் இடம்பெற்றாலும் அவர் விளையாடவில்லை.

அதன் பின்னர் கடைசி டெஸ்ட்டிலாவது அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அவர் தன்னுடைய காயத்துக்கு சிகிச்சைப் பெற்றுக்கொள்ள லண்டனில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாராம்.

அதனால் அவர் இனிமேல் ஐபிஎல் தொடரில்தான் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது. இதனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பெரிதாக மாற்றம் இருக்காது என சொல்லப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரஜத் படிதார் நீக்கம்? – இளம் வீரருக்கு வாய்ப்பு!