வியாழன், 19 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2024 (08:07 IST)

திடீர் பல்டி அடித்த ஸ்ரேயாஸ் ஐயர்… ரஞ்சி கோப்பை அணியில் இடம்பெற்ற பெயர்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் அவர் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு உடலில் சிறு பிரச்சனைகள் இருந்ததால் பெங்களூருவில் இருந்த தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகள் மேற்கொண்டார்.

அங்கு அவர் உடல் தகுதி பெற்று விட்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதுகு வலியை காரணம் காட்டி இப்போது அவர் ரஞ்சி கோப்பையில் இருந்து விலகியுள்ளார். இது அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழ வழிவகுத்தது.

இந்நிலையில் அவரின் செண்ட்ரல் காண்ட்ராக்ட் ரத்து செய்யப்படும் என சொலல்ப்பட்ட நிலையில் இப்போது அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாட பணிந்து இறங்கி வந்துள்ளார். அரையிறுதிக்கான மும்பை அணியில் அவரின் பெயர் இடம்பெற்றுள்ளது.