செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (08:18 IST)

இந்திய பவுலர்கள் பேட் செய்வதை மிகவும் கடினமாக்கிவிட்டார்கள்… பென் ஸ்டோக்ஸ் பாராட்டு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 353 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய  இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 46 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் அபார பந்துவீச்சு காரணமாக இங்கிலாந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 192 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 192 ரன்கள் சேர்த்தது. இந்த வெற்றியின் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

இந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் “இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது மிகவும் சவாலானதாக இருந்தது. அதுவும் அஸ்வின், குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் பந்துவீசும் போது பேட்டிங் செய்வதை மிகவும் கடினமாக்கிவிட்டார்கள். ஸ்ட்ரைக்கை சுழற்ற கூட முடியவில்லை. கிரிக்கெட் என்பது திறமைகளுக்கு இடையிலான சவால் ஆகும். அப்படி பார்த்தால் இந்திய வீரர்கள் எங்களை விட திறமையாக செயல்பட்டுள்ளார்கள். எங்கள் அணியிலும் ஹார்ட்லி மற்றும் பஷீர் போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்கள் தங்கள் கேரியரின் தொடக்க காலத்திலேயே இத்தகைய சூழலுக்கு தள்ளப்பட்டது கடினமான ஒன்றே” எனக் கூறியுள்ளார்.