திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 ஏப்ரல் 2022 (18:22 IST)

கே எல் ராகுல் அபாரசதம்…. 6 ஆவது தோல்வியைத் தவிர்க்குமா மும்பை இந்தியன்ஸ்?

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன.

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு போட்டியில் கூட இதுவரை வெல்லாமல் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியோடு மோதுகின்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி கேப்டன் ராகுலின் அபார சதத்தால் 199 ரன்கள் சேர்த்தது. ராகுல் 60 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி தற்போது 3 விக்கெட்களை இழந்து 63 ரன்களை எடுத்து போராடி வருகிறது. இதனால் இன்று 6 ஆவது தோல்வியை தவிர்க்கும் வாய்ப்பு மங்கி விடுகிறது.