1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 16 ஏப்ரல் 2022 (08:54 IST)

3 நிமிடங்களில் கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி!

corona test
3 நிமிடங்களில் கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி!
மூன்றே நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் புதிய கருவிக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
 
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய சோதனை செய்யப்படுகிறது என்பதும் இந்த சோதனையின் முடிவு தெரிய கிட்டத்தட்ட ஒரு நாள் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 3 நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை அவசர பயன்பாட்டுக்காக அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது
 
இந்த கருவி மூலம் நாளொன்றுக்கு சுமார் 160 மாதிரிகளை பரிசோதனை செய்யலாம் என்றும் தகவல் அளித்துள்ளது. தற்போது அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ள இந்த கருவி பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது