1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 16 ஏப்ரல் 2022 (10:45 IST)

குழந்தைகளுக்கு கொரோனா?

உத்தரப் பிரதேசத்தில் நொய்டாவில் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகம் பதிவாகி வருகிறது. 

 
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. ஆனால் வட மாநிலங்களில் கொரோனா மீண்டும் உயரத்துவங்கியுள்ளது. 
 
குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் நொய்டாவில் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகம் பதிவாகி வருகிறது. ஒரே வாரத்தில் சுமார்  44 குழந்தைகள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
மேலும், 12-15 வயதினருக்கான தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். மேலும் 12 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.