ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2024 (09:25 IST)

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

Shubman Ghill

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலும் சுப்மன் கில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

 

ஆஸ்திரேலியா செல்ல தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் ஓப்பனிங் பேட்ஸ்மேனான சுப்மன் கில்லும் உள்ளார். ஆனால் இடது கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. ரோகித் சர்மாவும் அவரது மனைவிக்கு குழந்தை பிறந்ததன் காரணமாக முதல் டெஸ்ட்டில் இல்லை. இந்நிலையில் இருவரும் இரண்டாவது டெஸ்ட் முதல் அணியில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால் சுப்மன் கில்லுக்கு கையில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் பயிற்சி ஆட்டம், மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வது சந்தேகமே என தகவல்கள் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட்டில் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K