75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரி கிடையாதா?
இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரி கிடையாது என்ற வதந்தி இணையத்தில் பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க வதந்தி என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் செயலியில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், 75 வயது மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு அளித்துள்ளதாக மத்திய அரசு உத்தரவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது போலியான தகவல் என்றும், முழுக்க முழுக்க வதந்தி என்றும், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானத்திலிருந்து மட்டுமே வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், மற்ற வரிகள் அவர்களுக்கு பொருந்தும் என்றும், போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரி விலக்கு என்ற செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Edited by Siva