தொடர்புடைய செய்திகள்
- சாம்பியன்ஸ் ட்ராஃபியே இந்தியாவுக்கு சாதகமாக இருக்கு.. அவ்ளோ சொகுசு! - தென்னாப்பிரிக்க வீரர் கருத்து!
- ஒரு பந்துகூட வீசவில்லை.. பாகிஸ்தான் - வங்கதேசம் போட்டி ரத்து.. இன்று ஒரு செம்ம மேட்ச்..!
- ஆப்கன் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி.. ஜாஸ் பட்லர் கேப்டன் பதவியை துறக்கிறாரா?
- இனிமேலும் ஆப்கானிஸ்தானின் வெற்றியைப் பார்த்து ஆச்சர்யப்பட முடியாது.. சச்சின் பாராட்டு!
- கடைசி பந்தில் ஆப்கானிஸ்தான் த்ரில் வெற்றி.. பாகிஸ்தான் போலவே இங்கிலாந்தும் வெளியேற்றம்..!
தோல்விக்குப் பொறுப்பேற்று கேப்டன் பதவியை துறந்த ஜோஸ் பட்லர்!
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து அணி தோற்றது எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. இந்த தோல்வி காரணமாகவே இங்கிலாந்து அணி தொடரில் இருந்தே முதல் சுற்றுடன் வெளியேறியது.
தோல்விக்குப் பின்னர் பேசிய அணிக் கேப்டன் பட்லர் "சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகுவது வருத்தமாக உள்ளது. வெற்றி பெற வாய்ப்பு இருந்தும், அதை நாங்கள் கை விட்டுவிட்டோம். ஜோ ரூட் நம்ப முடியாத அளவுக்கு நன்றாக விளையாடினார். அழுத்தத்தை சிறப்பாக சமாளித்தார். அவருக்கு துணையாக, டாப் 6 பேட்டர்களில் ஒருவர் உதவியிருந்தால் கூட , நாங்கள் போட்டியை வென்றிருப்போம்.” என வருத்தத்தை வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கான வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்பை அவர் துறந்துள்ளார். அணியை சிறப்பாக வழிநடத்தும் ஒருவரிடம் கேப்டன் பொறுப்பு செல்லவேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்