செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (15:38 IST)

பவுலிங்கின் போது நுரையீரலில் ரத்தக்கசிவு – வினோத நோயால் ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர்!

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ் வினோத நோயால் பாதிக்கப்பட்டு அதனால் கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜான்  ஹேஸ்டிங்ஸ். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி 1 விக்கெட்டும் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பவுலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடக்கூடிய இவர் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்காமல் போராடி வந்தார்.

முதல் தர கிரிக்கெட் மற்றும் பிக்பாஷ் போன்ற உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடி வந்த இவர் ஒரு வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பந்து வீசும் போது அவரது நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருமல் மற்றும் ரத்த வாந்தி எடுத்துள்ளார். மருத்துவர்களிடம் சோதனை மேற்கொண்ட ஹேஸ்டிங்ஸ் ஒரு சோகமான முடிவை எடுத்துள்ளார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பந்து வீசும் போது ஏற்படும் நுரையீரல் ரத்தக்கசிவை நிரந்தரமாக நிறுத்த முடியாது எனக் கூறியதால் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துகொள்ளும் சோகமான முடிவை மன வருத்தத்தோடு அறிவித்துள்ளார்.