புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (15:44 IST)

ஆஸ்திரேலியாவுக்கு 462 ரன்கள் இலக்கு –வெற்றி விளிம்பில் பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற பாகிஸ்தான் 462 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது

துபாயில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் மூத்தவீரர் ஹஃபீஸ் மற்றும் சோஹைலின் அபாரமான சதத்தால் 486 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை குவித்தது.

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிஞ்ச் மற்றும் கவாஜா சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தும் மற்ற  வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகி வெளியேறியதால் அந்த அணி 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழ்ந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக அறிமுக சுழற்பந்து வீச்சாளர் பிலால் ஆசிஃப் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஆஸ்திரேலியா வீரர்களில் அதிகபட்சமாக பிஞ்ச் 62 ரன்களும் கவாஜா 85 ரன்களும் சேர்த்தனர்.

இந்நிலையில் 280 ரன்கள் முன்னிலையோடு தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேரை அறிவித்தது. ஆஸ்திரேலியாயின் ஜான் ஹோலண்ட் அதிகபட்சமாக மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து மொத்தமாக 461 ரன்கள் பின் தங்கியிருக்கும் ஆஸ்திரேலியா அணி 462 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 12 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்துள்ளது. பிஞ்ச் 21 ரன்களோடும் கவாஜா 17 ரன்களோடும் விளையாடி வருகின்றனர். போட்டி முடிய இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.