1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 3 நவம்பர் 2018 (17:12 IST)

விராட் கோலியை புகழ்ந்த கிரேட் ஸ்மித்

இந்தியா அணி தற்போது நல்ல பார்மில் உள்ளது.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி அபாரமாக விளையாடியது. இதில் தொடரையும் வென்றது.
இதற்கு அணியின் கேப்டன் விராட் கோலி முக்கிய பங்காற்றினார். இதில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதும் வென்றார். சர்வதேச தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திலும் நீடிக்கிறார்.
 
இந்நிலையில் இம்மாத இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது.
 
இதுகுறித்து தென்னாப்பிரிக்கா கேப்டன் கிரேட் ஸ்மித் குறிப்பிடும் போது, ’ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடும். கிர்க்கெட்டில் குறைந்த அளவே சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். இதில் சிலர் இங்கிலாந்து அணியில் இருகிறார்கள். இந்திய அணி வீரர் விராட் கோலியும் சூப்பர் ஸ்டார்தான் .கிரிகெட் உலகின் முடி சூடா மன்னனாக அவர் இருகிறார்.’ இவ்வாறு அவர் கூறினார்.