1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 ஜனவரி 2026 (19:30 IST)

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

healy
2023ம் வருடம் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றவர் ஹீலி. சிறந்த விக்கெட் கீப்பராக திகழும் அலிசா ஹீலி.. பல டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்நிலையில்தான் பிப்ரவரி, மார்ச் மாதம் நடைபெற உள்ள போட்டிகளுக்கு பின் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பல போட்டிகளில் விளையாடவுள்ளது. அதுதான் தனது கடைசி போட்டி என அறிவித்திருக்கிறார் ஹீலி.

குறிப்பாக டெஸ்ட் போட்டி மட்டுமல்லாமல் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். எனவே, வருகிற மார்ச் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பெர்த் நகரில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் ஒரு பகல், இரவு டெஸ்ட் போட்டியே அவரின் கடைசி போட்டியாக இருக்கும்.

கடந்த சில ஆண்டுகளாகவே விளையாட்டின் மீது தனக்கு ஆர்வம் குறைந்திருப்பதாகவும், மனரீதியான சோர்வை சந்திப்பதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் ஹீலி. மேலும் விளையாட்டில் ஏற்பட்ட தொடர் காயங்கள் மற்றும் விரல் எலும்பு உள்ளிட்ட சில உடல் நலப் பிரச்சினைகளை பிரச்சனைகளும் இந்த முடிவை எடுக்க வைத்ததாக அவர் கூறியிருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை எடுத்திருக்கிறார். 2023ம் வருடம் மெக் லானிங் ஓய்வு பெற்றபின் கேப்டன் பதவிக்கு வந்த ஹீலி ஆஸ்திரேலியா அணியை சிறப்பாக வழிநடத்தினார். சர்வதேச டி20 போட்டிகளில் 126 அதிக விக்கெட்டைகளை எடுத்த விக்கெட் கீப்பர் என்கிற உலக சாதனையும் இவர் படைத்திருக்கிறார். மொத்தமாக 275க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீலி  கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவது அவரின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.