3வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி.. பாகிஸ்தான் 0-3 என வாஷ் அவுட்..!
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
பாகிஸ்தான அணி இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 313 ரன்கள் எடுத்தது. இதனை 2வது 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிஅ அணி தனது முதல் இன்னிங்ஸில் 299 ரன்கள் எடுத்த நிலையில் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. நேற்று அந்த அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து எட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் நேற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசங்கள் வெற்றி பெற்று பாகிஸ்தானை வாஷ் அவுட் செய்தது.
Edited by Siva