வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2024 (16:20 IST)

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்க்கல் நியமனம்.!!

Morne Morkel
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க வீரர் மோர்னே மோர்க்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.  
 
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த பந்துவீச்சுப் பயிற்சியாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது.
 
தற்போதைய பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ள பாராஸ் மாம்ப்ரேவுக்கு பதிலாக புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
 
இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்கள் ஜாகீர் கான் மற்றும் லட்சுமிபதி பாலாஜி ஆகியோரின் பெயரை பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியானது.   

 
இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க வீரர் மோர்னே மோர்க்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.  பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.