1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Jadeja mistake rohith Sharma angry moment throwing cap

ஜடேஜா செய்த தவறால் கடுப்பான ரோஹித் ஷர்மா… தொப்பியைக் கழட்டி வீசி ஆவேசம்!

இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று மூன்றாவது டெஸ்ட் போட்டி  ராஜ்கோட்டில் தொடங்கியது.  முதலில் மூன்று விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறிய இந்திய அணி அதன்பின் அபாரமாக விளையாடி உள்ளது.

நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். 6 ஆவது வீரராக இறங்கிய சர்பராஸ் கான் தன் முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார்.

அவர் 62 ரன்களில் இருக்கும் போது ஜடேஜாவின் தவறான அழைப்பால் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் சதத்தை நோக்கி முன்னேறிய அவரின் விக்கெட்டை பரிதாபமாக இழந்தார். சர்பராஸ் கான் அவுட் ஆன போது டக்கவுட்டில் இருந்து அதைப் பார்த்த ரோஹித் ஷர்மா கோபமாகி தன்னுடைய தொப்பியை கழட்டி வீசினார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. தொடர்ந்து விளையாடிய ஜடேஜா சதமடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். 
 
அடுத்த கட்டுரையில்
ரோஹித் சர்மாவை அடுத்து ஜடேஜாவும் சதம்.. முதல் நாள் முடிவில் ஸ்கோர் விபரம்