செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2024 (17:27 IST)

இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய இன்னொரு கட்சி.. தனித்து போட்டி என அறிவிப்பு..!

farooq-abdullah
இந்தியா கூட்டணி ஆரம்பிக்க காரணமாக இருந்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் அடுத்தடுத்து அந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் விலகி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஃபரூக் அப்துல்லா  கட்சியும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளது. 
 
பிரதமர் மோடியை பதவியில் இருந்து தூக்கி ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தியா கூட்டணி தற்போது துண்டு துண்டாக சிதறி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
ஏற்கனவே மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
 
இந்த நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு  கட்சியும் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கேட்டில் நிலவி வரும் சிக்கல் காரணமாக தனித்துப் போட்டி என அறிவித்துள்ளது
 
 தேசிய மாநாட்டு கட்சி இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சியாக இருந்த நிலையில் அந்த கட்சியும் தற்போது இந்தியா கூட்டணியில் இருந்து விலகி உள்ளது.
 
Edited by Mahendran