1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ishanth Sharma talked about dhoni angry moment

தோனியின் கோபம் இப்படிதான் இருக்கும்… உண்மையை பகிர்ந்து கொண்ட இஷாந்த் சர்மா!

கோலி
இந்திய அணியில் மிக இளம் வயதிலேயே அறிமுகமாகி வேகப்பந்து வீச்சாளராக ஜொலித்தவர் இஷாந்த் சர்மா. பின்னர் அவருக்கான வாய்ப்புகள் லிமிடெட் ஓவரில் கிடைக்காமல் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதியில் இருக்கும் இஷாந்த் சர்மா சமீபத்தில் தன்னுடைய முன்னாள் கேப்டன் தோனி குறித்து பகிர்ந்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளனர். அதில் அவர் “தோனிக்கு அரிதாக சில நேரங்களில் கோபம் வரும். ஒருமுறை நான் பந்துவீசிவிட்டு சோர்வாக இருந்தபோது ‘உனக்கு வயதாகிவிட்டது. களத்தை விட்டு வெளியேறிவிடு’ எனக் கோபமாக சொன்னார். இன்னொருமுறை என்னிடம் பந்தை எறியும் போது அவரின் கோபத்தைப் பார்த்தேன்” எனக் கூறியுள்ளார்.

கேப்டன் கூல் என்று அறியப்படும் தோனியின் கோபம் பற்றி இஷாந்த் சர்மா கூறியுள்ள தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளன. ரசிகர்கள் வெகு அரிதாகவே களத்தில் தோனி ஆக்ரோஷமடைவதை பார்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஆஷஸ் தொடர்… மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆஸி அணி தடுமாற்றம்!