வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2023 (08:34 IST)

100 ஆவது டெஸ்ட்டில் களமிறங்கிய ஸ்மித்தை அவமானப்படுத்திய இங்கிலாந்து ரசிகர்கள்!

தற்கால கிரிக்கெட் வீரர்களில் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டராக இருப்பவர் ஸ்டீவ் ஸ்மித். டெஸ்ட் போட்டிகளில் அவர் 60க்கும் மேல் சராசரியை வைத்துள்ளார்.பிராட்மேனுக்கு அடுத்து அதிக சராசரி கொண்ட கிரிக்கெட் வீரராக உள்ளார்.

இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் தன்னுடைய 100 ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அப்போது அவரை இங்கிலாந்து ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷமெழுப்பினர்.

இதற்குக் காரணம் கடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவை சர்ச்சைக்குரிய வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் ஆக்கியதுதான். பின்னர் இந்த போட்டியில் அவுட் ஆகி டி ஆர் எஸ் கேட்ட போதும் அவரை சீட்டர் என்று இங்கிலாந்து வீரர்கள் கத்தில் அவரை அவமானப்படுத்தினர். வழக்கமாக இங்கிலாந்து ரசிகர்கள் எதிரணி வீரர்களையும் பாராட்டும் குணம் பெற்றவர்கள். ஆனால் இம்முறை இப்படி நடந்து கொண்டது ஆச்சர்யமாக அமைந்தது.