வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 9 மார்ச் 2024 (10:51 IST)

தர்சமாலா டெஸ்ட்டில் இருந்து ரோஹித் சர்மா விலகல்… பிசிசிஐ அறிவிப்பு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மூன்று போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இன்று தரம்சாலாவில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதையடுத்து இந்திய அணி ரோஹித் மற்றும் கில் ஆகியோரின் அபாரமான சதத்தை அடுத்து 477 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இப்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் எஞ்சிய மூன்று நாட்களும் கேப்டன் ரோஹித் ஷர்மா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. பேட்டிங்கின் போது அவருக்கு முதுகில் தசைபிடிப்பு ஏற்பட்டதால் அவர் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.