150 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் முதல் முறை… இந்தியா& இங்கிலாந்து படைத்த சாதனை!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மூன்று போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இன்று தரம்சாலாவில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அதையடுத்து இந்திய அணி ரோஹித் மற்றும் கில் ஆகியோரின் அபாரமான சதத்தை அடுத்து 477 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இப்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 100 சிக்ஸர்களை அடித்துள்ளனர். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டதில்லை. இந்த சிக்ஸர்களில் இந்தியா 72 சிக்ஸர்களும், இங்கிலாந்து 28 சிக்ஸர்களும் விளாசியுள்ளது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 26 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.