1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 12 மார்ச் 2024 (14:24 IST)

முத்துமாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் விழா கோலாகலம்..!

Temple
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி  பங்குனி பால்குட பெருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த பால்குட பெருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா கடந்த 27 தேதி  நடைபெற்றது.
 
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.   காப்பு கட்டுதல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 


தொடர்ந்து 19 ம் தேதி திருக்கோயில் கரகம், மது, முளைப்பாரி ஊர்வலமும், 20 ம் தேதி காவடி, பூக்குழி, பால்குட பெருவிழாவும், அன்று இரவு காப்பு பெருக்குதலும், 21 ம் தேதி அன்னையின் திருவீதி உலா, 22 ம் தேதி சந்தனகாப்பு அலங்காரமும் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.