1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL teams change their players

நெருங்கும் ஐபிஎல் போட்டி; அணிகளில் புதிய ஆட்கள் சேர்ப்பு!

IPL
ஐபிஎல் டி20 போட்டி செப்டம்பரில் நடைபெற உள்ள நிலையில் ஐபிஎல் அணிகள் அணியில் புதிய வீரர்களை சேர்த்து வருகின்றன.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஏப்ரலில் இந்தியாவில் தொடங்கப்பட்ட நிலையில் கொரோனாவால் இடையே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 வரை அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் அணி வீரர்கள் பலர் பல்வேறு காரணங்களால் அணியிலிருந்து விலகி வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை இணைக்கும் நடவடிக்கையில் ஐபிஎல் அணிகள் ஈடுபட்டுள்ளன, அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பேட் கம்மின்ஸ் விலகியதால் டிம் சௌதி சேர்க்கப்பட்டுள்ளார். அதுபோல பஞ்சாப் அணியில் ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக அடில் ரஷீத் சேர்க்கப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
432 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இங்கிலாந்து… இந்தியா 354 ரன்கள் பின்னடைவு!