திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (15:53 IST)

432 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இங்கிலாந்து… இந்தியா 354 ரன்கள் பின்னடைவு!

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்களுக்குள் சுருண்டது. தொடர்ந்து ஆடிய  இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் மிக அபாரமாக விளையாடி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினார்.

இந்நிலையில் இன்று ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து மேற்கொண்டு 8 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இப்போது இந்தியா முதல் இன்னிங்ஸில் 354 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில், இன்னும் 3 நாட்கள் ஆட்டம் மீதம் இருப்பதால் தோல்வியின் விளிம்பில் உள்ளது. வீரர்கள் அசாதாரணமான ஆட்டத்தை வெளிக்காட்டினால் மட்டுமே டிரா நோக்கி நகர்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.