ஐபிஎல் போட்டி சென்னை - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

csk
Last Updated: வியாழன், 3 மே 2018 (12:16 IST)
ஐபிஎல் டி20  கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபில் தொடரின் 33-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.  தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதவுள்ளன. 
 
தோனி தலைமையிலான சென்னை அணி, இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 6 வெற்றி, 2 தோல்வியுடன்  பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
 
அதேபோல் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி, 8 ஆட்டங்களில் 4 வெற்றி, 4 தோல்வியுடன் பட்டியலில்  நான்காம் இடத்தில்  உள்ளது.
kkr
ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் சென்னை - கொல்கத்தா அணி இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதித்துள்ளன. இதில் சென்னை அணி 11 முறையும், கொல்கத்தா அணி 6 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.
 
சென்னையில் நடந்த இந்த இரு அணிகள் இடையிலான முந்தைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :