வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 3 மே 2018 (04:54 IST)

த்ரில் வெற்றி பெற்ற டெல்லி: சிக்ஸர் அடிக்க தவறிய ராஜஸ்தான்

நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால் வெற்றி என்ற நிலையில் சிக்ஸர் அடிக்க தவறிய ராஜஸ்தான், டெல்லியிடம் தோல்வி அடைந்தது. த்ரில் வெற்றி பெற்ற டெல்லி அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறியது
 
டாஸ்வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசியதால் டெல்லி முதலில் பேட்டிங் செய்து 17.1 ஓவரில் 196 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் மழை பெய்ததால் ராஜஸ்தான் அணி 60 பந்துகளில் 151 என்ற இலக்கு அளிக்கப்பட்டது.
 
இந்த இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி 12 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ரிஷாப் பேண்ட் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.