1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 2 மே 2018 (17:25 IST)

மெட்ரோ ரயிலில் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஜோடிக்கு பயணிகள் கொடுத்த அடி-உதை

கொல்கத்தா மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி ஒன்று சக பயணிகள் முன் சில்மிஷத்தில் ஈடுபட்ட அருவருப்பான சம்பவத்தை அடுத்த சக பயணிகள் அந்த காதல் ஜோடியை அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சாந்தினி சவுக் என்ற பகுதியில் இருந்து டம்டம் என்ற பகுதிக்கு செல்லும் மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி ஒன்று ஏறி இருக்கையில் அமர்ந்தனர். ரயில் கிளம்பிய சில வினாடிகளில் இருவரும் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது உள்பட சில்மிஷங்களில் ஈடுபட்டனர். 
 
ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சக பயணிகள் அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களை கண்டுகொள்ளாமல் காதலர்கள் கருமமே கண்ணாக இருந்தனர். இந்த நிலையில் ரயில் அடுத்த நிறுத்தத்தில் நின்றபோது சக பயணிகள் அந்த காதல் ஜோடியை அடித்து உதைத்து ரயிலில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். அதன்பின்னர்தான் அந்த ரயிலில் பயணம் செய்தவர்கள் நிம்மதியாக பயணம் செய்ய முடிந்தது. இருப்பினும் இந்த காதல் ஜோடியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் சிலர் புகார் கொடுத்துள்ளனர்.