1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
  4. Out with 1 run per century .Criscail frenzy on the field !!

மைதானத்தில் பேட்டை தூக்கி வீசி கிறிஸ் கெயில் ஆவேசம் !!

rajasthan
ஐபிஎல்- தொடரின் 50 வது லீக் போட்டி அபுதாபியில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கியது.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி மோதும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச முடிவெடுத்தது.

இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரர்ன் மந்தீப் சிங் முதல் பந்தில் ஆட்டமிழக்கவெ அடுத்து அதிரடி நாயகன் கிறிஸ் கெயில் வந்தார்.

அவர் கே.எஸ்.ராகுலுடன் நிதானமாக விளையாடினார். பின்னர் அதிரடி காட்டி ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இப்போட்டியில் 19 ஆவது ஓவரின்போது, அவர் 92 ரன்கள் இருந்தார். அடுத்து ஒரு சிக்ஸர் அடிப்பார் என எதிர்ப்பார்த்தபோது ஆர்சர் வீசிய 3வது பந்தில் சிக்ஸர் அடித்தார். இன்னும் சதத்திற்கு 1 ரன் தேவையென்ற நிலையில்,  கிளீன் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.

ஒரே ரன்னில் சதத்தை இழந்த விரக்தியில் பேட்டை மைதானத்தில் வீசினார்.இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. கிறிஸ்கெயில் 66 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து அவுட்னார்.
எனவே ராஜ்ஸ்தான் அணிக்கு 186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

அடுத்த கட்டுரையில்
ஐபிஎல்-தொடரிலிருந்து தோனி ஒய்வு??? வீரர்களுக்கு ஆட்டோகிராஃப் கொடுத்தது ஏன்??