திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 அக்டோபர் 2020 (23:30 IST)

ஐபிஎல்-2020; சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி !

சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிபெற்ற முகத்துடன் இந்த ஐபிஎல்-ஐ விட்டு வெளியெறியது.

இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியத்துவம் இல்லாத போட்டி என்றாலும் கொல்கத்தா அணி இன்று வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பைப் பெறும் என்பதால் மேட்ச் ஆரம்பம் முதல் பரப்பான இருந்தது.

இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச்சுத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 
5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

கொல்கத்தா அணியினல் ரனாண 87 ரன்களும், கில் 26 ரன்களும் எடுத்தனர்.

சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தோனி கைகொடுக்கவில்லை இந்த மேட்சில்…ஆனால் அவரது தம்பிகள் அடித்து தூள் கிளம்பினார்கள்.

கடைசி ஓவரில் சென்னை அணி வீரர் ஜடேஜா இரண்டு பந்துகளில் இரண்டு சிக்சர்கள் அடித்து கொல்கத்தா அணிக்கு எதிராக இலக்கை எட்ட உதவினார்.

சென்னை சிங்கங்கள்தான் என்று நிரூபித்துவிட்டது.

இனி அடுத்த வருடம் மீண்டும் இதே ஃபார்பில் களமிறங்க வாழ்த்துவோம்…