1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (23:36 IST)

IPL-2024 :ரஹ்மானின் அசத்தல் பந்து வீச்சு...சூப்பர் கிங்ஸுக்கு வெற்றி இலக்கு இதுதான்!

rcp-chennai kings
20 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி அணி 173 ரன்கள் எடுத்து சி.எஸ்.கே அணிக்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
 
ஐபிஎல் -2024 சீசனின் முதல் லீக் போட்டி இன்று சென்னையில் நடந்து வருகிறது. இப்போட்டியில் பெங்களூரு அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதி வருகிறது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
 
எனவே சென்னை அணி அ பந்து வீசியது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆ.ர்.சி.பி அணியில் விராட் கோலி 21 ரன்னும், டூ பிளசிஸ் 35 ரன்னும்,  கிரீன் 8 ர்னனும், அனுஜ் ராவட் 48 ரன்னும், தினேஷ் கார்த்தி, 28 ர்னனும் அடித்தனர்.
 
20 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி அணி 173 ரன்கள் எடுத்து சி.எஸ்.கே அணிக்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
 
ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில்,தீபக் சாஹர் 1 விக்கெட்டும், அபாரமாக பந்துவீசிய ரஹ்மான் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.
 
வெற்றி இலக்கை நோக்கி இன்னும் சிறிது நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிபேட்டிங் செய்ய உள்ளது.
 
இப்போட்டியில் அதுவும் 2024 முதல் ஐபிஎல் போட்டியில் யார் ஜெயித்து வெற்றிக் கணக்கை தொடங்குவது என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.