திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2024 (23:33 IST)

IPL -2024; CSK -வா? RCB -ஆ? முதல் போட்டியில் ஜெயிக்கப் போவது யார்?

rcp-chennai kings
ஐபிஎல் -2024 சீசனின் முதல் லீக் போட்டி இன்று சென்னையில் நடந்து வருகிறது. இப்போட்டியில் பெங்களூரு அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதி வருகிறது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
 
எனவே சென்னை அணி அ பந்து வீசியது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆ.ர்.சி.பி அணியில் விராட் கோலி 21 ரன்னும், டூ பிளசிஸ் 35 ரன்னும்,  கிரீன் 8 ர்னனும், அனுஜ் ராவட் 48 ரன்னும், தினேஷ் கார்த்தி, 28 ர்னனும் அடித்தனர்.
 
20 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி அணி 173 ரன்கள் எடுத்து சி.எஸ்.கே அணிக்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.
 
ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில்,தீபக் சாஹர் 1 விக்கெட்டும், அபாரமாக பந்துவீசிய ரஹ்மான் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.
 
வெற்றி இலக்கை நோக்கி  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிபேட்டிங் செய்து வருகிறது.
 
தற்போது வரை சென்னை அணியின் சார்பில் ருதுராஜ் 15 ரன்னும், ரவிந்திரா 37 ரன்னும், ரஹானே27 ர்னனும் மிட்செல் 22 ரன்னும் அடித்து அவுட்டாகினர்.
 
தற்போது, டூபே  6 ரன்னுடனும், டஜேஜா 10 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.
பெங்களூரு அணி சார்பில் 
 
 டேயல் மற்றும் ஷர்மா தலா 1 விக்கெட்டும், கெமரன் கிரீன் 2 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.
 
சென்னை அணி 15.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 29 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் மேட்ச் பரபரப்பாக உள்ளது.
 
இரு அணிகளும் சம பலத்துடன் மோதி வருவதால் யார் இப்போட்டியில் ஜெயிப்பது என்ற எதிர்பார்பில் ரசிகர்கள் ஆவலுடன் போட்டியை கண்டு வருகின்றனர்.