திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 23 மார்ச் 2024 (07:26 IST)

ஆர் சி பிக்கு தொடரும் சேப்பாக்கம் சோகம்… முதல் போட்டியில் சி எஸ் கே அசத்தல் வெற்றி!

ஐபிஎல் -2024 சீசனின் முதல் லீக் போட்டி நேற்று சென்னையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது.

அந்த அணியின் முதல் 5 விக்கெட்கள் அடுத்தடுத்து விழுந்து அந்த அணி 78 ரன்களுக்கு தடுமாறியது. அதன் பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் நிதானமாக விளையாடியும், இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடியும் அணியை 173 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோருக்கு கொண்டு சென்றனர்.

அதன் பின்னர் பேட் செய்ய வந்த சி எஸ் கே அணியில் அனைத்து  வீரர்களும் அதிரடியாக விளையாடினர். இதனால் 19 ஆவது ஓவரில் நான்கு விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது.

இந்த வெற்றியின் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் ஆர் சி பி அணியால் சி எஸ் கே அணியை வீழ்த்தவே முடியாது என்ற சோகம் தொடர்ந்துள்ளது. கடைசியாக 2008 ஆம் ஆண்டு பெங்களூர் அணி சி எஸ் கே வை சேப்பாக்கம் மைதானத்தில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.