திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 4 மே 2023 (17:16 IST)

“ஏன் இதையே திரும்ப திரும்ப கேட்கிறீர்கள்..” – தோனி பற்றிய கேள்விக்கு சேவாக் கோபம்!

ஐபிஎல் போட்டிகள் வந்தாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மட்டுமல்ல மற்ற அணி ரசிகர்களுமே தோனியின் சிக்ஸர்களை காண குவிந்து விடுவர். இந்திய அணி ஜாம்பவான் வீரரான தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால் அப்படி ஒரு மவுசு.

இந்நிலையில் நேற்றைய போட்டி தொடங்கும் முன்னர் தோனியிடம் கேள்வி எழுப்பியபோது தொகுப்பாளர் டேனி மோரிசன் “இது உங்கள் கடைசி ஐபிஎல்.. ரசிகர்களின் ஆதரவால் மகிழ்ச்சி அடைகிறீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு கூலாக பதில் சொன்ன கூல் கேப்டன் “இதுதான் என் கடைசி ஐபிஎல் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள். நான் இன்னும் முடிவு செய்யவில்லை” என்று கூறியுள்ளார். தோனியின் இந்த பதில் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் மீண்டும் தோனி ஓய்வு பற்றி கேள்வி கேட்கப்படுவது குறித்து சேவாக் ஆவேசமடைந்துள்ளார். அதில் “ஏன் திரும்ப திரும்ப இதே கேள்வியைக் கேட்கிறார்கள். அவரின் கடைசி சீசனாக இது இருந்தால் அவரே வாயைத்திறந்து சொல்லட்டும். அவருடைய கடைசி சீசனா இல்லையா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.” எனக் கூறியுள்ளார்.