1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL 2022-; Hyderabad team wins super

ஐபிஎல் 2022-; ஹைதராபாத் அணி சூப்பர் வெற்றி

IPL 2022
ஐபில்   திருவிழா சீசன் -15 இந்தியாவில் நடந்து வரும் நிலையில் இன்று  பெங்களூர் அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்று வருகிறது.

இதில், டு பிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணி முதலில்  பேட்டிங் செய்தது.

இதில் டுபிளஸிஸ் ரசிகர்களை ஏமாற்றி 5 ரன் களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்தவர்களும் சோபிக்கவில்லை.

ராவட் மற்றும் கோலி டக் அவுட் ஆகினர். மேக்ஸ் வெல் 12 ரன்களும், பிரபுதேசாய் 15 ரன்களும்,  அஹமத் 7 ரன்களும் படேல் 4 ரன்களுமா மொத்தம் 16.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளும் இழந்து 68 ரன் கள் மட்டுமே எடுத்து ஹைதரபாத் அணிக்கு 69 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.   

ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

இதையடுத்து,  பேட்டிங் செய்த அபிஷேக் சர்மா 47 ரன்களும், வில்லியம்சன் 16  ரன்களும், திரிப்பதி 7 ரன்களும் அடித்து   8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் அடித்து  9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
கடைசி இடத்தில் இருந்த ஐதராபாத் இன்று இரண்டாமிடம்: 5 போட்டிகளில் தொடர் வெற்றி