1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL-2022; Delhi Capitals team wins thrill

ஐபிஎல்-2022; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி த்ரில் வெற்றி !

IPL-2022
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியின் 58வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் டெல்லி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால்  ராஜஸ்தான் அணி  முதலில் பேட்டிங் செய்தது. அதில், ஜஸ்வல் 19 ரன்களும், அஸ்வின் 50 ரன்களும், படிக்கல் 48 ரன்களும், அடித்தனர், எனவே 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் அடித்து டெல்லி அணிக்கு 161 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் மார்ஸ் 89 ரன்களும், டேவிட் வார்னர் 52 ரன்களும், ரிஷப் பண்ட் 13 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

எனவே 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து , 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
கட்டாய வெற்றிக்கான போராட்டம்: சென்னை vs மும்பை!