திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 1 ஜூன் 2023 (12:37 IST)

ஜெர்ஸி ஸ்பான்சர் இல்லாமல் விளையாடும் இந்திய அணி!

இந்திய அணி ஜூன் 7 ஆம் தேதி ஆஸி அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டிக்காக இப்போது இங்கிலாந்தின் லண்டனில் தீவிர பயிற்சிகளை இரு அணிகளும் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி எந்த நிறுவனத்தின் ஜெர்ஸி ஸ்பான்சரையும் பெறவில்லை. அதனால் இந்திய அணியின் ஜெர்ஸியில் ஸ்பான்சர் பெயர் இடம்பெறாது என தெரிகிறது. முன்னதாக இந்திய அணிக்கு பைஜூஸ் நிறுவனம் ஸ்பான்சராக செயல்பட்டது. அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடியும் முன்னரே விலகிக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.